2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மூதாட்டி துஸ்பிரயோகம்: பேத்தியின் கணவர் கைது

Freelancer   / 2022 மே 12 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் வசிக்கும் 67 வயதுடைய பெண்மணியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்மணி தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவர் மீது முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து பெண்மணி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X