2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு

Freelancer   / 2022 ஜூன் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் 41 ஆவது வருட நினைவுகூரல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ். பொதுசன நூலகம் 1981 ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டு சிதைவடைந்த நிலையில், அது மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் நூலகம் எரியூட்டப்பட்ட தன் 41ஆவது நினைவு தினம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர், யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், நூலகம்  எரியூட்டப்பட்ட சம்பவம்  கேள்விப்பட்டவுடன் மாரடைப்பால் உயிரிழந்த அருட்தந்தை மற்றும் நூலக நிறுவுனரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி  செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .