சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ரவிகரன் இன்று (28) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.
இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறும் மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
11 minute ago
12 minute ago
23 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
23 minute ago
26 minute ago