2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

முல்லைத்தீவு, மல்லாவி ஒட்டக்குளம் சந்தியில் புதன்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் உயர்தரப் பரீட்சைக்கு சென்றுகொண்டிருந்த மாணவனான தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) உயிரிழந்துள்ளதுடன்,    எஸ்.சுஜீவன் (வயது 20) என்ற மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாவி மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான இவர்கள், 12.30 மணிக்கு உயர்தர புவியியல் பாடப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தனர். இதன்போது, ஒட்டகப்புலத்திலிருந்து பாண்டியன்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்;டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

மற்றைய மாணவன் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .