2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வேரவில் இந்து மகா வித்தியாலயத்தை தரமுயர்த்துமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தை தரமுயர்த்துமாறு கோரி, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பூநகரிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் பெற்றோர் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

பூநகரிக் கல்விக் கோட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான வேரவில் கிராமத்தில் தரம் 1 சி பாடசாலையாக உயர்தரத்தில் கலைப்பிரிவுடன் மட்டும் இயங்கிவரும் இப்பாடசாலையினை தரம் 1 ஏபி பாடசாலையாக தரமுயர்த்துவதன் மூலம்; வர்த்தக, கணித விஞ்ஞானப் பிரிவுகளில் மாணவர்கள் கல்விகற்கக்கூடிய நிலை உருவாகும்.

தற்போது மாணவர்கள் வர்த்தக, கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கு 25 கிலோமீற்றர் தூரத்திலுள்ள முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கும், 65 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள கிளிநொச்சி நகரத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் சென்று கற்க வேண்டியுள்ளது.

இப்பாடசாலையை தரமுயர்த்துவதன் மூலம் பாடசாலை வளர்ச்சியடைவதுடன் மாணவர்களுக்கும் கல்வி வசதி உருவாகும் என கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .