Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் சுமார் 5.5 மில்லியன் ரூபாய் நிதி யொதுக்கீட்டின் கீழ் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் பயிற்சி நெறியும் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறியும் மாவட்டச் செலயலகத்தின் சமூகசேவைத் திணைக்களத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட தொழில்நுட்பக் கல்லூரியினால் ஆறு மாத காலப்பயிற்சியாக வழங்கப்பட்டு வந்தது.
இப்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 40 பேருக்கும் சான்றிதழ்களும் பயிற்சி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை (01) கிளிநொச்சி மாவட்ட தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் ச.மோகனபவன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்ற நீங்கள் இந்த உதவிகளைக் கொண்டு வாழ்க்;கையில் முன்னேற்றம் அடைவீர்கள் என நாம் நம்புகின்றேன்.
இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையான தேவைகள் இருக்கின்றன. வீட்டுத்தேவைகள், வாழ்வாதாரம் தொடர்பான தேவைகள் இவ்வாறு பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது.
அந்த வகையில் நாங்கள் விரைவாக இந்த தேவைகளை நிறைவு செய்ய கடினமாக உழைத்து வருகின்றோம்.
கடந்த வாரம் கூட வீடுகளை புனரமைப்பதற்கான அல்லது புதிதாக அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்குரிய விஜயத்தை வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எமது திணைக்கள அதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் ஒருங்கிணைப்போடு மேற்கொண்டிருந்தனர்.
எங்களிடம் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பட்டியலாக மாற்றுத்திறனாளிகள் பற்றிய விடயம்இடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago