2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வழக்குகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சீர்திருத்தப் பணிகள்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் 79 வழக்குகளுடன் தொடர்புடைய  குற்றவாளிகள், இவ்வாண்டு சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் ஊடாக சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, பூநகரி, நாச்சிக்குடா, வட்டக்கச்சி மற்றும் கிளிநொச்சி அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டப்பணத்தினை செலுத்த முடியாமல் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக சமுதாயம் சார் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 
இவ்வாண்டு ஐனவரி முதல் தற்போது வரை 79 வழக்குகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இவ்வாறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு 23 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் பணிகளை முடித்து நல்லொழுக்கம் உள்ளவர்களாக வெளியேறியுள்ளனர்.
 
கடந்த 2014ஆம் ஆண்டில் 96 வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் இவ்வாறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் 63 வழக்குகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .