2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியா அம்மாச்சி உணவகம் திறக்கப்படுகின்றது

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம், நாளை (18) மீண்டும் திறக்கப்படவுள்ளதா,. வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ. சகிலா பானு தெரிவித்தார்.

திருத்தப்பணிகள் காரணமாக, செப்டெம்பர் 9ஆம் திகதியன்று அம்மாச்சி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

குறித்த புணரமைப்பு பணிகளுக்கான திட்ட முன்மொழிவுகள் 2018ஆம் ஆண்டே தயாரிக்கபட்டு, அதற்கான அனுமதி, நிதி கிடைத்ததாகவும் தற்போது அம்மாச்சி உணவகம் புனரமைக்கபட்டு மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக, நாளை திறக்கப்படவுள்ளதாகவும், அவர் ​மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X