Editorial / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீதே சனிக்கிழமை (26) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வசித்து வரும் தவசிகுளம் பகுதியில் வைத்து இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேக நபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Feb 2026
18 Feb 2026