2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியா சிறுமியின் மரணத்திற்கு காரணம் வெளியானது

Freelancer   / 2022 ஜூன் 02 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா - கணேசபுரம்  பகுதியில் கடந்த 30ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 16 வயதுச் சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

குறித்த சிறுமி நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனை தொடர்பில்  சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவிக்கையில், 

சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன், சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என   தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X