2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘வவுனியா வளாகம் விரைவில் தரமுயர்த்தப்படும்’

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இதுவரை காலமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை, வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக விரைவில் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சர் ரவூப் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்துக்கான தொழில்நுட்பப் பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணினி ஆய்வு கூடத்தையும் வெள்ளிக்கிழமை (15) மாலை திறந்து வைத்து, உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்குமாறு, தனது அமைச்சின் செயலாளருக்கும் மேலதிக செயலாளருக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியிலான பல்கலைக்கழகக் கணிப்பீட்டில், தமது பல்கலைக்கழகங்கள் குறைந்த தரத்திலுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைமை காணப்படுவதால், தமது பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறினார்.

எனவே, இவற்றை நிவர்த்தி செய்வதற்கு, பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்துக்கான புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .