Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் ஆதரவு தெரிவித்ததுடன், ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வடக்கு - கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது, இதுவரையும் இருந்து வந்த முறைமையை மாற்றி, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்தின முனைவதாகவும் கூறினர்.
“அது அவரது அரசியல் அனுகூலங்களுக்காகவே, இதன் காரணமாக வட, கிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாகுறை ஏற்படுவதுடன், கஷ்டபட்ட பிரதேசங்கள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும்.
“எனவே, மருத்துவர்களின் இடமாற்ற விடயத்தில், எந்தவித அரசியல் தலையிடும் இன்றி சுயாதீனமான நிலையை ஏற்படுத்த வேண்டும் இல்லாவிடில் தமது போராட்டம் தொடரும்” என்றனர்.
35 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago