2025 மே 17, சனிக்கிழமை

வவுனியாவிலிருந்து 15,000kg பெசன்புரூட் பழங்கள் கொள்வனவு

க. அகரன்   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெசன்புரூட் பழ அறுவடை மற்றும் கொள்வனவு நிகழ்வு, அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில், இன்று (16) இடம்பெற்றது.

வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன், வவுனியா வடக்கு - அனந்தர் புளியங்குளம் பகுதியில், பெசன்புரூட் பழச் செய்கை, பாரியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும், ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், பழச் செய்கையாளர்கள் தமது உற்பத்தியை விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்டனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பழச் செய்கையாளர்களின் நலன்கருத்தி, தென்பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு பழங்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்ய எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஓர் கட்டமாக, அறுவடை மற்றும் கொள்வனவு நிகழ்வு நேற்றைய தினம் காலை இடம்பெற்றது. இதன்போது,  ஒரு கிலோகிராம் பெசன்புரூட் பழங்களை 50 ரூபாய் வீதம், 15 ஆயிரம் கிலோகிராம் பழங்களை இலங்கையின் முன்னணி நிறுவனமான 'கார்கில்ஸ்' கொள்வனவு செய்திருந்தது.

இந்நிகழ்வில், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜயகுமார், உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .