Freelancer / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்ததோடு மாணவர்களின் வருகையும் மந்தகதியில் இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கு மேற்பட்ட தொழிற்ச்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியாவிலும் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
15 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
1 hours ago