2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வவுனியாவிலும் டயர் எரிப்பு

Freelancer   / 2022 மே 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா - கொரப்பத்தான வீதியில் ரம்பைக்குளம் பகுதியில் வீதியில் டயர் எரித்து போராட்டம் செய்த இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரொருவரும் அவருடன் சிறுமி உட்பட மேலும் ஒருவரும் இணைந்து வீதியோரத்தில் டயரை எரித்ததுடன் பதாதைகள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,

எரிக்கப்பட்ட டயரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதுடன், அவர்கள் ஏந்தியிருந்த பதாதைகள் மற்றும் தேசியக்கொடியை பறித்தெடுத்தெடுத்து, சிறுமியை தவிர்த்து ஏனைய இருவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர்.

சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் இருவரையும் பொலிஸார் எச்சரித்து விடுவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X