Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், நேற்று (26) பெய்த கடும் மழையுடன் இவ்வருடம் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார் .
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இன்று (27) அதிகாலை 8.30 மணி வரையிலான நிறைவடைந்த காலப்பகுதியில் 1,015.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இது, மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாகவும் இவ்வருடம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், நேற்று (26) மாத்திரம், 46.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
இடைக்கால பருவபெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்வதுடன், இடி மின்னல் தாக்கம் இருக்கும் எனவும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago