Freelancer / 2022 மே 30 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக தலை சிதறிய நிலையில் காயங்களுடன் ஒருவர் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபரை உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த வவுனியா பொலிஸார், குறித்த நபர் வர்த்தக நிலைய விடுதியின் மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட குறித்த நபர் இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் குறித்த விடுதியில் தங்கியிருந்து நகைவேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026