Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 07 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
கடந்த இரு மாதங்களில் வவுனியாவில் பெரியளவிலான குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறவில்லை என வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் தொடர்பில் வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்த பொலிஸார், சுகாதார துறையினர், படைதரப்பு மற்றும் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிருமி தொற்று நீக்கி கிருமிகளை விசிறல், கொரோனா தொற்று சந்தேக நபர்களை அடையாளம் காணல், ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஊரடங்கு தளர்வின் போது நகரில் சுகாதார நடைமுறைகளை கவனித்தல், அனுமதிப்பத்திரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு அர்ப்பணிப்படன் மக்களதும், அரச அதிகாரிகளினதும் பங்களிப்புடன் கடமைகளை செய்கின்றனர்.
கொரோனா தொடர்பில் பொலிஸார் இரண்டு வகையான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாத்தல் மற்றும் தம்மை பாதுகாத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தே கடமையாற்றுகிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வவுனியாவில் குற்றச் செயல்கள் எவையும் பெரியளவில் இடம்பெறவில்லை.
மதுபானசாலைகள் பூட்டப்பட்டமையால் சில இடங்களில் இடம்பெற்ற கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் பொது மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களும் பொலிஸாருக்கு உதவி வருகின்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025