2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியாவில் சோகம்; குளிக்கச் சென்ற மாணவர்கள் பலி

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக சென்ற நான்கு மாணவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு குளத்தில் குளிக்கச் சென்றனர்.

இவர்களில் இருவர் நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கினர் எனினும் அவர்கள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், கவிந்து - வயது 15, கைலாஸ் - 16 வயது மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X