2025 மே 22, வியாழக்கிழமை

வவுனியாவில் துப்பாக்கி மீட்பு

Editorial   / 2019 மே 13 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் காட்டுப் பகுதியில் இருந்து, இன்று (13) டி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையினருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X