2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மரம் நடுகை விழா

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தரணிக்குளம் கிராமத்தில் மரநடுகை விழா இன்று நடைபெற்றது. 

தரணிக்குளத்தில் வசிக்கும் கிருஸ்ணகுமார் என்ற சிறுவனின் மரம் நடுகையை ஊக்கிவிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் இத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்ற   இந்நிகழ்வில், மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதோடு, தரணிதீபம் விளையாட்டுக் கழத்துக்கான மைதனமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் திலீபன், கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராம  மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X