Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 21 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போ சந்திவரை ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்
ஆர்ப்பாட்டத்தின் போது, “பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே, அரசியல் தீர்வா விலைவாசி உயர்வா?, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌனத்தைக் கலை, அரசியல் தீர்வுக்கு பரிசு விலைவாசி உயர்வா?, உள்ளுர் உற்பத்திக்குச் சந்தையைத் தா, வெளிநாட்டு இறக்குமதிக்கு தடையே போடு, வேலைவாய்ப்பை தா விலையேற்றத்தை குறை, விவசாயிகள் பாடு திண்டாட்டம் முதலாளிகள் பாடு கொண்டாட்டம், சிறு கடன் தொடர் கடன் பெருங்கடனில் நாங்கள் கூட்டாட்சி நல்லாட்சி கொழுத்த ஆட்சியில் நீங்கள், நெல்லுக்கு நிர்ணய விலை வேண்டும் விவசாயிகள் நிமரவேண்டும், கடலால் சூழப்பட்ட நாடா இல்லை கடனால் சூழப்பட்ட நாடா?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
43 minute ago