2025 ஜூலை 26, சனிக்கிழமை

‘வீதிகளை புனரமைத்துத் தரவும்’

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

ஏ-9 சாலையில் இருந்து கிளாலி கிராமத்துக்குச் செல்லும் வீதியும் பளை நகரத்தில் இருந்து அல்லிப்பளை ஊடாக கிளாலிக் கிராமத்துக்குச் செல்கின்ற வீதியையும் புனரமைத்துத் தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாக, பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்துக்கு வருகை தர முடியாது இருப்பதாகவும், கிளாலி கடலில் பிடிக்கப்படுகின்ற கடல் உணவுகள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும், இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும், வீதி புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X