Princiya Dixci / 2022 மே 23 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயதுச் சிறுவன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் நேற்று காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்ற நிலையில், குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை மோதியதோடு, சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக அப்பகுதியில் சென்றவர்களால் சிறுவன் மீட்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலையில்,அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞன், அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில், தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
எனினும், இந்த விபத்து தொடர்பாகவும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும் ,பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026