Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 27 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியதுறை சீர்குலைந்திருப்பதற்கு, முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிமனையின் அதிகாரிகளே காரணமாக உள்ளனர் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மாந்தை கிழக்கின், நட்டாங்கண்டல் வைத்தியசாலை, துணுக்காயின் ஐயன்கன்குளம் வைத்தியசாலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வைத்தியர்கள் பணியில் இல்லை எனத் தெரிவித்த அவர். இதன் காரணமாக, மிகவும் பின்தங்கிய மேற்படி கிராமங்களின் வைத்தியதுறையின் நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
வைத்தியசாலைகளில் வைத்தியர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கே உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இதனைச் சரியாகச் செய்வதற்கு, அதிகாரிகள் முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சரியான தீர்மானங்களுக்குச் செல்ல முடியவில்லை எனவும் வடமாகாண சுகாதார அமைச்சரும் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றம் வரை இப்பிரச்சினைகளைக் கொண்டு சென்றுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
எனவே, வைத்தியதுறையின் அதிகாரிகள் பொறுப்புத் தன்மையுடன் நடப்பதன் ஊடாகதான் நட்டாங்கண்டல், ஐயன்கன்குளம் ஆகிய வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .