2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வைத்தியரின் வாகனம் விபத்து

Freelancer   / 2022 மே 05 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில், வைத்தியர் ஒருவரின் ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று இடம்பெற்ற விபத்தில், வைத்தியருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் உள்ள மரங்களுடன் பலமாக மோதியுள்ளது.

குறித்த வைத்தியர் அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X