2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் அறுவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 கிலோ 240 கிராம் எடையுடைய ஹெரோய்ன் போதைபொருளை கடத்திய 6 பேரை மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் வைத்து கடற்படையினர், சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து  மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஒருவர் இந்திய பிரஜை எனவும் ஏனைய 5 பேரும் இலங்கையர்கள் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த ஹெரோய்னின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோய்னை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .