Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்ல வருமானம், சொத்து சுகம் எல்லாமே இருந்தும் கூட, மற்றையவர்களிடம் சென்று, மேலும் ஏதாவது உதவி பெறலாம் என இரந்து நிற்றல் அல்லது கையேந்துதல் கடவுளுக்கே பொறுக்காது. மேலும் இந்தச் செயற்பாடு, எல்லாவற்றையும் வழங்கி வரும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்காமல், பேராசையால் அவரை அவமதிக்கும் கருப்பொருளாகும்.
திருப்தியில்லாத வாழ்க்கை பெரு நெருப்புக்குள் படும் அவஸ்தையைப் போன்றதுதான். தனக்குள்ளதை உணராமல் பிறரது நிலையைப் பார்த்து அங்கலாய்ப்பது, தன்னைத்தானே அகௌரவப்படுத்துவது போன்றது.
இரந்து கேட்டால் தனக்குள்ள இயலாமையையே வெளிக்காட்டும். தன்மானம் என்பது இருப்பதைக் கொண்டு வாழுதலேயாகும். அதுவே நன்மையுமாகும்.
ஏழைகளுக்குள்ள தன்மானம், சுயகௌரவம், வசதிபடைத்த பலருக்கு இருப்பதில்லை. தாங்கள் நினைத்ததை அடைய எதனையும் செய்யலாம்; அதற்கான உரிமை தமக்கானது என மட்டும் எண்ணும் நபர்கள் வாழும் உலகம் இது! திருப்தி என்பது பணத்தினால் அல்ல; மனத்தினால் வருவதாகும்.
வாழ்வியல் தரிசனம் 08/12/2016
பருத்தியூர் பால – வயிரவநாதன்
6 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago