2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

உண்மைத்துவம் ஒருவனை வலிமையாக்கும்

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் உள்ள பயில்வானிடம் போட்டியிட்டு வெல்வதற்கு ஒருவன் அவரைப் பார்க்கச் சென்றான். பயில்வான் தனது சிற்றுண்டிச்சாலையில் இருப்பதால் அங்கு சென்றவன், அங்கே அவர் தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  

கடையின் தோற்றம், பொருட்கள் வைத்திருந்த நேர்த்தி, எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது. அங்கு, பயில்வான் தேநீர் தயாரிக்கும் நேர்த்தியைப் பார்த்து வியந்து போனான். நிதானமாகச் செம்மையாக, நல்ல துப்பரவான பாத்திரத்தில் தயாரித்து அதனை அவனுக்கு வழங்கினார்.  

ஆனால், பயில்வானுக்கு வந்தவன் என்ன நோக்கத்துக்காக வந்தான் என்பது தெரியவே தெரியாது. ‘அட! இத்தனை நேர்த்தியாகக் கருமமாற்றுபவரிடம் எப்படி என்னால் மோதமுடியும். தனது மல்வித்தையையும் இப்படித்தானே பயின்றிருப்பார்’ என்று மனதார உணர்ந்தவர் அங்கிருந்து விடைபெற்றார். 

செய்கருமங்களை ஆத்மார்த்தமாகச் செய்பவனின் செயலின் விஸ்தீரணம் அளவிட முடியாதது. இதன் உண்மைத்துவம் அவனை வலிமையாக்கும்.  

 

வாழ்வியல் தரிசனம் 26/01/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X