Editorial / 2018 ஜூன் 14 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லோருடைய அறிவுக்குள்ளும் இறைவன் பிரவேசிக்கின்றார். சிலர் அதைப் புரிந்துகொண்டு, தங்கள் திறமையை, வலுவை, முயற்சியை ஸ்திரப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆண்டவன் ஆசீர்வாதத்தை உணர்வதும் புரிவதும் அவர் நல்கும் அருளால் மட்டுமே முடியும்.
பல சமயங்களில் நாங்கள் சிக்கல்கள் நிறைந்த நிலையில் இருக்கும்போது, உள்ளுணர்வுகள் பல சமிக்ஞைகள் செய்யும். அதன் அறிவுறுத்தல்களை உணர்ந்து, நல்ல முடிவுகளை எடுத்த, நல்ல அனுபவங்களை உணர்ந்திருப்பீர்கள்.
அறிவும் மனமும் ஒன்று சேர்ந்தால், மனித பலம் விரிவடையும். நெஞ்சத்தைப் பல தேவையற்ற பாதைகளில் சஞ்சரிக்க விட்டால், மூளை குழம்பிப்போகும்.
மனிதன் இத்தகைய நிலையில் அமைதியுடன் இருந்தாலே போதும். உள்ளே ஒரு வெளிச்சம் உருவாகியே தீரும். முடியாததை முடிக்கும் ஆற்றல் உங்களிடம் உண்டு. பிறர் மூளைகளைக் கடன் வாங்க வேண்டாம். உங்களை, நீங்கள் நம்பாது விட்டால், காலம் பூராவும் இரவல் மூளைகளுடன் தான் உறவாட வேண்டியிருக்கும். உங்களைவிட உங்களுக்குச் சிறந்த நண்பர் யார் உளர்?
வாழ்வியல் தரிசனம் 14/06/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
35 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago