2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்கள் உண்டு

Princiya Dixci   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்கள் என்றாலே மக்கள் ஆண்டவன் மீதுதான் தங்கள் கோபத்தைக் காட்டுவதுண்டு. ஆனால், எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்கள் உண்டு. மனிதர்களின் அடாத செயல்களையும் நாங்கள் ஏற்கத்தான் வேண்டும்.  

ஆனால், புயல் ஏன் வருகிறது என்பதை விடுத்து, அதனால் இந்தப் பூமிக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றித் தெரியவேண்டாமா? 

பூமிப்பந்து வெப்பதட்பங்களால் சூடேறியிருக்கிறது. என்னதான் கடல், ஆறு, ஏரிகள் இருந்தாலும் கூட, வெப்பத்தைச் சீராக்கும் கைங்கரியத்தைப் புயல் செய்கின்றது. 

அதிவேகமான புயல், பரந்த பரப்ப​ளவைக் காற்றினால் சீராக்கி விடுகின்றது. இதனை மனிதரால் செய்யமுடியாது. புயல் அசுர சக்தியல்லவா? 

இயற்கையின் மாற்றங்களால் மக்களுக்கு ஏற்படும் நலன்களைப் பற்றி நாம் உணர்வதுமில்லை. கருணையே இறைகுணம்! உணர்க தோழர்களே!

வாழ்வியல் தரிசனம் 17/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X