2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஒன்று வாழ மற்றையது இறக்க வேண்டியுள்ளது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாம்பு ஒன்று ஒரு தவளையை விழுங்குவதை ஒருவர் கண்டுவிட்டார். அந்தத் தவளைமீது கருணைகொண்டவர், தடியினால் ஓங்கித் தலையில் அடித்து விட, பாம்பும் துடிதுடித்து இறந்து விட்டது. ஆனால், தவளையும் பாம்பின் வாயினுள்ளே இறந்து விட்டது. அழிவில்தான் ஜனனம் நடக்கின்றது. தவளையும் சிறு பூச்சிகைளை நம்பித்தான் ஆன வேண்டும்.  

இதை உணராதவர், அதிர்ச்சியுற்று, “அடடா! நான் பாம்பையும் கொன்று விட்டேன்; தவளையும் இறந்து போய் விட்டது. பாம்பைக் கொன்ற பாவம் கூட வந்துவிட்டதே” எனப் பெரிதும் கவலைப்பட்டார்.  

ஒவ்வொரு உயிர்களும் உணவின் பொருட்டு ஏதொவொரு வழியைக் கையாண்டேயாக வேண்டும். காட்டில் வலிமை குறைந்த விலங்குகளை வலிமை கூடிய விலங்குகள் உண்பது போல், கடலில் சின்ன மீனைப் பெரிய மீன்கள் கௌவுவதும் இயற்கைதான்.

வேட்டையாடாமல் அவைகளால் வாழமுடியாது. மனிதரும் மாமிசம் உண்பதில்லையா? ஒன்று வாழ மற்றையது இறக்க வேண்டியுள்ளது. இந்தப் பெரிய மனிதனை கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கொன்று விடுகின்றன.  

 வாழ்வியல் தரிசனம் 06/12/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .