2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கலை வளர்ச்சிக்கு ஆதரவு நல்க வேண்டும்

Administrator   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று திரைப்படம் தயாரிப்பவர்களும் நடிகர்களும் அதனோடிணைந்தவர்களுமே பொருளீட்டி வருகின்றனர். மக்களோ இவர்களைக் கோடீஸ்வரர்களாக்கித் தாங்களோ மதுவுண்ட வண்டுகள் போலாகி வருகின்றனர். நல்ல காலம், எமது நாட்டில் இந்த நிலை சற்றுக்குறைவுதான்.  

ஆனால், திரைப்படங்களுக்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் கொடுக்கும் மேலதிகமான கௌரவத்தினைப் பெற்​றோர், ஆசிரியர்களுக்கு வழங்குவதாகத் தெரியவில்லை.  

கருத்து ஆழமுள்ள திரைப்படங்களை விட, காமமும் கூத்தும் கொச்சை வசனமும் பொருந்தாத கதைகளையும் கொண்ட காட்சிகளால் பொய்மையாகப் புனையப்பட்ட புகைப்படங்களே இளைய தலைமுறைகளை மட்டுமல்ல முதியவர்களையும் ஈர்த்து வருகின்றன.  

தெய்வீகமான நாட்டிய நாடகம், இசைகள் நல்ல கலைஞர்களால் பேணப்பட்டு வந்தாலும் மேலதிகமான வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவு நல்கியே ஆக வேண்டும். தமிழைக் காப்பாற்றுதல் என்பது, அதன் கலை, க​லாசாரங்களை மேம்மடுத்துதல்தான்!  

வாழ்வியல் தரிசனம் 02/12/2016

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .