2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘காதலை அகௌரவப்படுத்தலாகாது’

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூங்கா ஒன்றில் காதல் ஜோடி, மிக அந்நியோன்னியமாக காதல்மொழி பகிர்ந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு யுவதி அங்கே வந்தாள். இவர்களைப் பார்த்தவள், அதிர்ச்சியடைந்தாள். “ஏன்டா, நீ இன்னமும் திருந்தவேயில்லையா” என்றவள், கோபாவேசத்துடன் முறைத்தபடி, நடக்க ஆரம்பித்தாள்.

அவள் போனவுடன் “அட, இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறதா? நீ என்ன மனுஷன்” என்றபடி, கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு, அருகில் இருந்தவளும் நகர்ந்தாள்.

கன்னத்தைத் தடவியபடி, மிகவும் பரிதாபமாக அவன் நிற்க, அங்கு வந்த இன்னொரு யுவதி, “என்னடா, உன்னைக் காணுவதே அரிதாக இருக்கிறது. எங்கே போனாய்” என்று கேட்க, உடனே அவனும் தனது பாணியில், “அடி, உன்னை மறப்பேனா, பரீட்சைக்குப் படித்துவிட்டு இன்றுதான் வருகிறேன்” என்றான்.

“சரி சரி, வா மச்சான்” என்றபடி, அவன் இடையில் தனது கரத்தை இணைத்து நடக்க, இருவரின் பொழுதுபோக்கு ஆரம்பமானது.

தெருவில் காதல் மயக்கத்துடன் உலா வருபவர்கள் உண்மையான காதலர்கள் என்றா நீங்கள் எண்ணுகின்றீர்கள்? இளவயதில் அல்ல, முதுமையிலும் ஸ்திரமான காதலை எண்ணுபவர்கள் வீதியோரம் அலைந்து திரியமாட்டார்கள். களவியல் புதுமையல்ல;  அது கற்புடன் அமையவேண்டும். காதலை அகௌரவப்படுத்தலாகாது.

வாழ்வியல் தரிசனம் 26/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .