Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகாத வழியில் சிற்றின்பத்தை நாடினால், பல்லாயிரம் துன்பங்களைக் காவித்திரிய வேண்டி ஏற்பட்டுவிடும். காதல், காமத்தை முறையான நெறியில் பெற, நல்மார்க்கங்கள் உண்டு. நல்மார்க்கங்கள் வாழ்வில் கலந்து விட்டால் அன்பு, குடும்ப உறவுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும்.
முறையற்ற விதத்தில் காமத்தை வெளிப்படுத்துவது, இறுதியில் அகௌரவத்தை மட்டுமல்ல, சமூகத்திலும் அவப்பெயரை உண்டுபண்ணும் எனத் தெரிந்தும், அதில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இன்று, செல்வம் தான் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. இது பல போலித்தனங்களை உருவாக்குகிறது. ஆயினும், பணம் இல்லாதவர்கள் எல்லோரும் முறையாக வாழ்கின்றார்கள் என்பதில்லை.
வாழும் முறையை அறிந்திடாமல் வாழ்பவர்களுக்கு, நல்ல பாதைகளை உருவாக்குவது, சுலபமானது செயல் அல்ல; ஆனால் முடியும். எந்தவித அருவெறுப்பும் இன்றி, அவர்களை அரவணைத்து, ஆன்மிகம், அறக்கருத்துகளைப் போதித்திடுக. ஒருமித்துச் செயற்பட மதம், மொழி, சாதி வேறுபாடற்ற அணுகுமுறை தேவையானது.
முதலில் நல்ல மனிதர்கள் ஒன்றுபட வேண்டும். துணிச்சலுடன் சேவை புரிபவரே மனிதன். இணையாதவர்கள் நற்காரியமாற்றத் தகுதி அற்றவர்கள்.
வாழ்வியல் தரிசனம் 25/09/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .