2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பொய்மையாளர் அபத்தமாக உரை புனைவார்

Princiya Dixci   / 2017 ஜனவரி 11 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களின் மனோபாவம் சில சமயங்களில் வேடிக்கையாக மாறுதலடையும். எவருடனாவது தர்க்கம் செய்யும்போது, தவறுதலாக ஒரு கருத்தைச் சொல்லுவார்கள். அது தவறுதான் எனத் தெரிந்தும்கூட, சொன்ன தவறான கருத்தைத் தெரிந்தும் அதனை விட்டுக் கொடுக்காமல் அதுவே சரி என வாதிடுவார்கள். 

இதனைச் செவிமடுப்போருக்கு எரிச்சலும் கோபமும் வந்தால் ஆச்சரியமில்லை. உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பதால் அவர் பொய்மையை விரும்புகின்றவர் ஆகின்றார். மேலும் நம்பிக்கையற்றவர், நாணயமற்றவர் எனும் கருத்தைப் பிறருக்குள் ஏற்படுத்தி விடுகின்றார். 

பேசுவதெல்லாம் வெறும் பேச்சாய் அமையக்கூடாது. எப்பொழுதும் வாயினால் சொல்லும் வாக்கு உள்மனதோடும் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். நெரிய நெஞ்சில் இருந்து உதிர்க்கப்படுபவை சுத்தமானது. பொய்மையாளர் அபத்தமாக உரை புனைவார்.  

நல்லதைப் பேசினால் நல்லதே நடக்கும்.

வாழ்வியல் தரிசனம் 11/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X