2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பொறுமையுடன் நிறை மாந்தராக உயர்ந்திடுக

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகிப்புத்தன்மை என்பதே மனோபலத்தின் ஆழமான அடையாளம்தான். தன்னம்பிக்கை மிகையாக உள்ளவர்களே, சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.  

தனது குறிக்கோளை அடைய மௌனமாக இருப்பவன் என்றும் தனது மனோபலத்தில் நம்பிக்கையுடையவனாவான். மாறாத திடசிந்தனையுடன், எடுத்த நல்ல காரியங்களைச் சிரத்தையுடன் ​முடிப்பான்.  

மேற்படி சிந்தனையினை மனத்தில் இருத்தினால், பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மையும் பிறர்செய்த தவறுகளை மன்னிக்கும் இயல்பும் தானாகவே சுரக்கும்.  

தேசத்தலைவர்களின் மாபெரும் வெற்றிக்கு, இந்தச் சகிப்புத்தன்மையே கைகொடுத்துள்ளது. மேலும், எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எடுத்த காரியத்தை சகிப்புத்தன்மையுடன் ஏற்று, இடர் களைந்து வெற்றியீட்டியுள்ளார்கள். 

சதா சஞ்சலமான நிலையினை நிரந்தரமாகக் கொண்டவர்களுக்குப் பொறுமை எது? பொறுமையுடன் நிறை மாந்தராக உயர்ந்திடுக. 

வாழ்வியல் தரிசனம் 04/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .