2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

மரணம் புதிதல்ல

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லா மனிதர்களுமே நோய் வந்துதான் மரணிக்க வேண்டியுள்ளது. இயற்கை எய்தினார் என நாம் ​சொல்கின்றோம். அதாவது, நோய் என்னும் இயற்கை நிகழ்வு, எப்படியோ மரண காலம் வந்தவுடன் மனிதர் உயிரைப் பறித்து விடுகின்றது. 

உடலில் உறுப்புகள் செயலிழந்ததும் உயிர் பிரிந்து விட்டதாகச் சொல்கின்றோம். தானாக உயிர் அடங்கிப் பிரிவது, ஆன்மிக வள்ளல்களுக்கே நிகழ்கின்றது. இவர்கள் நோய் இன்றியே, தமது ஆன்மா பிரியும் நேரத்தையும் அனைவருக்கும் சொல்லிவிடுவார்கள்.  

ஆனால், சாமானியர்களுக்கு இப்படி நிகழாது. ஏதோ ஒரு நோய் அவயவத்தில் ஏற்பட்டு, பின்பு மரணத்தை ஏற்படுத்தி விடுகின்றது.  

தற்கொலை, கொலை, விபத்து என்பவற்றைத் தவிர, இயற்கை மரணங்கள் நோய் காரணமாகத்தான் நடப்பது ஒன்றும் புதிதல்ல. 

உடலை ஒருவன் பேணினால் அவன் வாழ்நாளில் சிரமமின்றி, நிம்மதியாக வாழமுடியும். மரணம் புதிதல்ல அது வராமலும் இருக்க முடியாது. உடல்வாழ ஆன்​மாவையும் தூய்மையாக வைத்திருங்கள்.  

வாழ்வியல் தரிசனம் 07/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X