2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல; சந்தோசமாக ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்கும் புனிதமான ஸ்தலம். இதனை நாம் கௌரவிக்க வேண்டுமானால், அங்கு வசிக்கும் அங்கத்தினர் யாவருமே, ‘இது இறைவன் அமைத்த எமக்கான அன்பளிப்பு, கொடை’ எனக் கருத வேண்டும்.   

வீட்டை அழகாக அமைத்தால் மட்டும் போதுமா? அங்குள்ளவர்கள் தங்கள் இதயத்தை விசாலமாக்கி, ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாகவும் இருக்க வேண்டும்.

அன்பு மருவாத இல்லத்தில் ஆண்டவன் சஞ்சாரம் செய்யமாட்டான். உள்ளும் புறமும் தூய்மை துலங்க வாழ்வதே அறவாழ்க்கையாகும். 

இல்லத்தை இனிமை துலங்கும் கோவில் ஆக்குக. அங்கு அமைதியும் இறைவழிபாடும் அவசியமானது. அதேசமயம் சதா மௌனமாக, சூனியப் பிரதேசமாகவும் ஆக்கிவிடக்கூடாது. குதூகலமும் இனிய சப்த ஜாலமும் உயிர்ப்புடன் துலங்குவதே வீடு.  

 

வாழ்வியல் தரிசனம் 26/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .