2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வாழ்க்கையில் எதுவும் நடக்கும்

Princiya Dixci   / 2017 ஜனவரி 09 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனது செயலுக்கு நானே பாத்திரமானவன். பிறர் அல்ல; பிறரைச் சாட்டுதல் சொல்லியே தப்பிக்கவும் முடியாது. எனவே, எனது பொறுப்புகளை  நானே சுமக்க வேண்டும். இதன் பொருட்டு எனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்மையாக்க வேண்டும்.

எல்லா மனிதர்களுமே தனித்தனியான பிறப்புகள்தான். அவரவர்களுக்கான வலிமையும் முயற்சியும் தனித்துவமானது. அவர்களே இதனைச் சிருஷ்டித்தாக வேண்டும்.

இந்த விடயத்தில் முழுமையான மனிதனாக, ஸ்திரமான மனநிலையைத் துணிச்சலாக உருவாக்குதல் வேண்டும்.

இறைதுணையுடன் காரியமாற்றினால் மமதையும் ஆணவமும் விட்டொழிந்து போகும். காரிய சித்தி மேலோங்கும். அன்பை உயிர்களுக்கு ஊட்டுவதால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

வாழ்க்கையில் எதுவும் நடக்கும். அதற்கு எம்மைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இன்பம், துன்பம் யதார்த்தம் என்பதை சிந்தையில் இருத்திக்கொள்க.

வாழ்வியல் தரிசனம் 09/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X