2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இயக்குநர் மணிவண்ணன் காலமானார்

A.P.Mathan   / 2013 ஜூன் 15 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் இன்று காலை மாரடைப்பினால் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 59.
 
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 இற்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார். அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகிய 50ஆவது திரைப்படமாக வெளியாகி இருந்தது.
 
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குநராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.

  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 15 June 2013 04:58 PM

    அதிர்ச்சியான துயர செய்தி... மறைந்த மணிவண்ணன் சினிமா உலகில் ஒரு யதார்தவாதி. சிறந்த கலைஞர். ஒழிவு மறைவின்றி யாருக்கும் அஞ்சாமல் எந்த விடயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து விமர்சிப்பவர். அவரது மரணம் ஒரு பேரிழப்பு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .