2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2 வயது மகளின் கைகளை சுவரில் ஒட்டி சித்திரவதை செய்த அமெரிக்க தாய்க்கு 99 வருட சிறை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 13 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொல்வதைக் கேட்கவில்லை என்ற கோபத்தில் இரண்டு வயது மகளின் கைகளை சுவரிட் ஒட்டவைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய அமெரிக்கத் தாயொருவருக்கு 99 வருட சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் டல் லாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவருக்கு 5 குழந்தைகள். அவர்கள் செய்யும் குழப்படிகளால் அடிக்கடி கோபமடைவால் எலிசபெத். சம்பவ தினம், இவரது 2 வயது மகள் ஜோகெலைன் தான் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ளவில்லை என்ற காரணத்தால் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். பால் பாத்திரத்தால் அடித்தும், வயிற்றில் காலால் உதைத்தும் சித்திரவதை செய்துள்ளார்.

அப்போதும் தனது கோபம் அடங்காத பட்சத்தில் சிறுமியின் 2 கைகளிலும் சக்திவாய்ந்த பசையை தடவி சுவற்றில் ஒட்ட வைத்துள்ளார். இதனால், சிறுமியின் மார்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுவரில் இருந்து கையை பிய்த்து எடுத்ததில் கைகளிலும், தோல்கள் சதையுடன் பிய்ந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டதால் சிறுமி கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், எலிசபெத்தின் ஏனைய குழந்தைகளிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 5 நாட்களாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

முடிவில் எலிசபெத்திற்கு 99 வருட சிறை தண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்தார். குழந்தை என்ற அழகிய பரிசுக்கு எலிசபெத் செய்த கொடுமைகளைப்போல் வேறு யாரும் இனி செய்யக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்நாள் வரையில் எலிசபெத் விடுதலையாகி வெளியில் வரக்கூடாது என்பதற்காகவே 99 வருட தண்டனை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், 45 வருடங்கள் வரை அவர் பிணை மனு கோர முடியாது எனவும் தீர்ப்பளித்துள்ளார் அமெரிக்க நீதிபதி.

  Comments - 0

  • irakkakandyan Saturday, 13 October 2012 08:37 PM

    இதை அமெரிக்கர் செய்தால், உலகத்தில் நடக்கின்ற குற்றங்களில் பத்தில் ஒன்றாக கணிக்கப்படும். அதுவே ஆப்கானிஸ்தானில் அல்லது சவுதி போன்ற நாடுகளில் நிகழ்ந்தால் உலக மகா குற்றமாக பீ பீ சி முதல் சி என் என் வரை பெரிதுபடுத்தபடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .