2025 மே 14, புதன்கிழமை

ஆணுறுப்பை பெரிதாக்குவதற்காக சிலிக்கன் ஊசிகளை ஏற்றிய பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


நபரொருவரின் ஆணுறுப்பை பெரிதாக்குவதாக கூறி அந்நபருக்க சிலிக்கன் ஊசிகளை ஏற்றிகொலை செய்தததாக அமெரிக்காவில் பெண்ணொருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அழகு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வரும் கசியா ரிவேரா என்பவரே இத்தகைய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 
இவர் ஜஸ்டீன் ஸ்டீர்ட் என்ற 22 வயது இளைஞருக்கு இவ்வாறு சிலிக்கன் ஊசிகளை ஏற்றியுள்ளார்.

சிலிக்கன் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மேற்படி இளைஞனின் நுரையீரலில் குருதிக் கட்டியொன்று ஏற்பட்டு அவ்விளைஞன் அடுத்தநாள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவத் தொழில்புரிந்தமை போன்ற குற்றங்களுக்காக ரிவேரா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரிவேராவுக்கு எதிராக வேறு எவரும் சாட்சியமளிக்க முன்வராத நிலையில் ரிவேரா 75,000 அமெரிக்க டொலர்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X