Kogilavani / 2011 ஜூன் 22 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் கடையொன்றில் விலை உயர்ந்த தோலிலர் ஆடையொன்றைத் திருடி தனது உள்ளாடைக்குள் 3 நாட்கள் மறைத்து வைத்தச் சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஸ்டெபனி மோர்லன்ட் (வயது 46) என்ற பெண்ணே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு அகப்பட்டுள்ளார்.
இவர் பூமிங்கன் நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் சுமார் 7 லட்சம் ரூபா பெறுமதியுள்ள கோட் ஒன்றை திருடியதாக கடை ஊழியர் ஒருவரினால் பொலிஸாரிடம் புகாரிடப்பட்டது.
மேற்படி பெண்ணின் காரை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். கோர்ட் கொளுவுவதற்குரிய ஹங்கர் காணப்பட்டது. ஆனால் கோட் இல்லை. சந்தேகத்தின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
அதிகாரிகள் 3 நாட்களாக அவரிடம் விசாரணைகளையும் மேற்கொண்டனர். மெட்டல் டிடக்டர் மூலம் சோதனையும் செய்தனர். ஆனால் திருடப்பட்டதாக கூறப்படும் கோர்ட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் 3 நாட்களின் பின் இறுதியாக தனது ஆடைகளை தளர்திய அவர் உள்ளாடைக்குள்ளிருந்து அந்த கோட்டை வெளியே எடுத்தார்.
இத்திருட்டுக்காக அவர் தனது உள்ளாடையை பல்வேறு மாற்றத்திற்குட்படுத்தியிருந்ததாக பூமிங்டன் பொலிஸ் கட்டளை அதிகாரி மார்க் செத்லிக் தெரிவித்துள்ளார்.
20 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
52 minute ago