Editorial / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கர்பைகளுடன் பிறந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டிலும் கர்ப்பமான அரிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் Kelsey Hatcher என்ற பெண், இரண்டு கர்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். அதைவிட அதிசயம், அந்த இரண்டு கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ வரலாற்றில் இது ஓர் அரிய நிகழ்வு.
Kelsey Hatcher மற்றும் அவரது கணவர், Caleb, இது கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகின்றனர். இவர்களுக்கு ஏற்கெனவே ஏழு, நான்கு மற்றும் இரண்டு வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வரும் கிறிஸ்துமஸுக்கு இந்த இரண்டு குழந்தைகளும் பிறக்கவுள்ளன. ஆனால், ஒவ்வொரு கர்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்கக்கூடும் என்பதால், குழந்தைகள் மணிநேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026