2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இரத்தத்தை குடிக்கும் பெண்: அதுவும் தினமும் 1 லீற்றர்

Editorial   / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்போதும் சைவம் சாப்பிடுவோருக்கும், அசைவம் சாப்பிடுவோருக்கும் இடையில் சிறு சிறு பிணக்கு இருப்பதை நாம் அனைவருமே அறிந்திருப்போம். இப்போது சைவ விரும்பிகளையே அலறவைக்கும் வகையில் கலாசாரம் வளர்ந்து வருகிறது எனலாம். அசைவம் சாப்பிடுவோரிலும் பெரும்பாலும் பல பிரிவுகள் இருக்கும். சிலர் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள், சிலர் மாட்டுக்கறியை தவிர்த்து பிற உணவுகளை சாப்பிடுவார்கள், ஒரு சிலரோ பன்றி கறியை சாப்பிட யோசிப்பார்கள். 

ஆனால், இங்கு பெண் ஒருவர் இரத்தத்தை அப்படியே குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். ஆம், ​அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற 40 வயது பெண்மணி, தினமும் ஒரு லீற்றர் ரத்தத்தை குடிப்பார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 2013ஆம் ஆண்டிலேயே பொதுவெளியில் தெரிவித்துள்ளார். அதிலும் சில மிருகங்களின் இரத்தத்தைதான் குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,"எனக்கு தண்ணீரை போல் ரத்தமும் ரொம்ப முக்கியம். புத்தகம் படிக்கும்போதும், தொலைக்காட்சி பார்க்கும்போதும், ஓவியம் வரையும்போதும், ரிலாஸாக இருக்கும்போது இரத்தத்தை குடிக்கும் வழக்கம் இருக்கிறது. எனக்கு அதனை குடிப்பதால் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

அவர் மிருகங்களின் இரத்தத்தைதான் அதிகம் குடிப்பவராக இருந்தாலும், மனித இரத்தம் ருசியானது எனவும் தெரிவித்துள்ளார். "மிருகங்களின் இரத்தத்தை விட மனிதர்களின் இரத்தத்தைதான் நான் விரும்புவேன். அமெரிக்காவில் விதிமுறைகள் கடுமையாகவிட்டது. மனித இரத்தம் எளிமையாக கிடைப்பதில்லை, மேலும், அதை குடிப்பதும் சற்று கடினம்தான். ஆனால், நான் இரத்த காட்டேரி இல்லை. எனக்கு இரத்தம் குடிக்க பிடிக்கும் அவ்வளவுதான்" என்றார். 

மேலும், இந்த பழக்கம் எங்கு தொடங்கியது என்பது குறித்தும் அவர் விளக்கி உள்ளார். மிச்செலின் பதின்ம வயதில் ஏற்பட்ட சில மனநிலை பிரச்னைகளால் அவர் தன்னை உடல் ரீதியாகவும் வருத்திக்கொண்டுள்ளார். அந்த சமயத்தில்தான் அவருக்கு இந்த இரத்தம் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த பழக்கம் எப்படி வந்தது?

அதாவது, அவரது 18 வயதில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அத்தகைய மனநிலையில் அவர் தனது கையை அறுத்துள்ளார். அப்போது அவரது கையில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. அப்போது அந்த இரத்தத்தை வாயில் வைத்து ருசி பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அந்த ருசி மிகவும் பிடித்திருந்திருக்கிறது. அன்றிலிருந்து இந்த பழக்கத்தை அவர் தொடர்ந்து வைத்துளளார். 

"இரத்தம் என் தொண்டையில் இறங்கும்போது, சளி பிடித்து சூடான பானத்தை குடிப்பது போன்ற உணர்வு இருக்கும். எனக்கு இரத்தம் கிடைக்கவில்லை என்றால் எரிச்சலும் கோபமும் வருகிறது. எனது வீட்டை விட்டு வெளியே போக மனம் வராது. எனக்கு இரத்தம் எப்போதும் வேண்டும்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .