Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாசாவின் கியூறியோசிட்டி ரோவரில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக அது தரவுகளை புவிக்கு அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவிக்கிறது.
இதனால் செவ்வாய் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி கடந்த வாரம் சனிக்கிழமையன்று மேற்படி கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர்.
ரோவரிலிருந்து தரவுகள் நல்லபடியாக வந்துகொண்டிருந்த போதிலும், நாசாவால் அதன் நினைவகத்திலிருந்து சில தகவல்களைப் பெறமுடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
சில நாட்கள் முயற்சி செய்தும் கூட நாசாவால் அத்தகவல்களை செவ்வாயிலிருந்து பெறமுடியாமல் போயுள்ளது. அத்தோடு ரோவரில் ஏற்பட்டுள்ள இக்கோளாறை சீர்செய்யும் வரை நாசாவால் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 minute ago
21 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
28 minute ago
39 minute ago