2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நபரின் மர்ம உறுப்பை கடித்துத் தின்றது செல்ல நாய்!

Freelancer   / 2024 மார்ச் 01 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெர்மனியில் நபர் ஒருவரின் மர்ம உறுப்பை அவரின் செல்ல நாய் கடித்துச் தின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில், வடமேற்கு ஜேர்மனியின் 'பேர்ன்' பகுதியின் வீடொன்றில், நாய் ஒன்று இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்ததை அடுத்து, அண்டை வீட்டுக்காரர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர். 
அதிகாலை 2 மணியளவில் அந்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், வீட்டுக்குள் நபர் ஒருவர் முனகிக் கொண்டிருந்ததை கேட்டு, கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே போய் பார்த்தபோது 66 வயதுடைய குறித்த நபர், மர்ம உறுப்பு இல்லாத நிலையில், படுகாயமுற்று வேதனையில் துடித்துக்கொண்டிருந்ததையும், அங்கு அவருடைய செல்ல நாய் அருகில் இருப்பதையும் கண்டனர்.
அந்த நபரின் மோசமான உடல் நிலை காரணமாக, அவரால் அது பற்றி எந்த தகவலும் வழங்கமுடியாத நிலையில் அவர் இருந்தார். 
அந்த நபர் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து கொண்ட பொலிஸார், உடனடியாக செயல்பட்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருடை மர்ம உறுப்பு காணப்படாததாலும், அங்கு வேறெந்த தடயங்களும் இருக்காததாலும், அவருடைய செல்ல நாய் தான், அவருடைய மர்ம உறுப்பை கடித்து தின்றிருக்கும் என்று பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவர்கள் அவருக்கு செயற்கையாக கோமா நிலையை ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி லெமானிஷ் தெரிவித்தார்.
குறித்த நபரிடம் இருந்து, விரைவில் தகவல்களை பெறக்கூடியதாக இருக்கும் என்று, பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். 
இதுபோன்ற சம்பவங்கள் பல  ஏற்கனவே நடைபெற்றிருப்பதால், இது பாலியல் விபத்தாகவோ அல்லது வேறுவிதமான குற்றச்செயலாகவோ இருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர். S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X