Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 19 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து சனிக்கிழமை(17) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்ததாகவும், இவர் ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவர் தனது உறவினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago