Editorial / 2026 மே 15 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீட மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.
கடற்படையின் தொழில்நுட்பப் பங்களிப்பு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, கடற்படை இதுவரை நாடு முழுவதும் ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து (1155) நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் ஏராளமான மாணவர்களின் சுத்தமான குடிநீர் தேவையை, புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஊடாக இனி எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.



8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago